187 பாலில் கலப்படம்: ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை!

சென்னை:

னியார் பாலில் கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்று கூறி,  தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதைத்தொடர்ந்து பால் கலப்பட விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப் படடது. பரபரப்பான இந்த வழக்கில், தமிழக அரசு சார்பில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், 2011 ம் ஆண்டு  2017 ம் ஆண்டு வரை ஆய்வுக்கு அனுப்பப்பட்ட பால் மாதிரிகளில் 187 பால் மாதிரிகள் தரம் குறைந்தவை. பால் கலப்படம் தொடர்பாக இதுவரை 143 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று கூறியுள்ளது.

தமிழகத்தில் சில தனியார் பால் நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் பாலில் கலப்படம் நடைபெறுவதாகவும், இதனால் அதனை அருந்துவோரின் உயிருக்கே ஆபத்து உண்டாவதாகவும், தமிழக பால்வளத்துறை அமைச்ச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து தமிழகத்தில் கலப்பட பால் விற்பனையை தடுக்க தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த விவகாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது

அதனைத் தொடர்ந்து தமிழக அரசின் சார்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை இன்று கோர்ட்டில்  தாக்கல் செய்தார்.  அதில் கூறப்பட்டுள்ளதாவது,

தமிழகத்தில் 2011-ம் ஆண்டு தொடங்கி 2017-ம் ஆண்டு வரை, ஆவின் பால் உட்பட மொத்தமாக 886 பால் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவற்றில் 187 பால் மாதிரிகள் தரம் குறைந்தவை என்பது சோதனைகள் மூலம் உறுதியாகியுள்ளது.

பால் தவிர பால் பொருட்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.அவற்றில் 57 பொருட்களின் தரம் குறைவு என்பது கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட மாதிரிகள் எந்த பிராந்தியத்தில் இருந்து தருவிக்கபட்டவை என்பது குறித்த தகவல்களும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.