இன்று மேலும் 1875 பேர்.. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 38,716 ஆக உயர்வு

சென்னை:

மிழகத்தில் இன்று மேலும் 1875 பேர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மெர்த்த கொரோனா பாதிப்பு 38,716 ஆக உயர்ந்து உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,407 பேர்   பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 1,372 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 20,705 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்று மேலும் 23 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 349 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது மருத்துவமனையில் 17,659 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று பாதிக்கப்பட்ட  1,875 பேரில் 38 பேர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 44 அரசு மற்றும் 33 தனியார் ஆய்வகங்களில்  கொரோனோ பரிசோதனை செய்யப்படுகிறது

இன்று வரை 6,16,395 நபர்கள் கொரோனா சோதனை செய்துள்ளனர். 38,716 பேரின் சோதனை முடிவுகள் பாசிடிவாக வந்துள்ளது. இன்னும்  564 மாதிரிகளின் சோதனை செயல்பாட்டில் உள்ளது.

This slideshow requires JavaScript.