சென்னை:

மிழகத்திற்கு இழப்பீடாக மத்திய அரசு ரூ.1,898 கோடி வழங்கி இருப்பதாக தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.

மத்திய பாஜக அரசு கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் 1ந்தேதி முதல் நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பாக சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்தியது. இதையடுத்து மத்திய நிதி அமைச்சர் தலைமையில் அவ்வப்போது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்தி, ஜிஎஸ்டியில் உள்ள வேறுபாடுகள் களையப்பட்டும், வரிகள் மாற்றப்பட்டும் வந்தன.

இதுவரை 37 முறை ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடந்துள்ளது. இன்று 38வது கூட்டம் நிதி அமைச்சர் நிர்மலா தலைமையில் டெல்லியில் நடைபெற உள்ளது.

இந்த ஜிஎஸ்டி அமல்படுத்தியதால், மாநிலங்களின் வரி வருவாய் குறைந்துள்ளதால், மத்திய அரசு இழப்பீடு தருவதாக அறிவித்திருந்தது. அதன்படி, கடந்த சில மாதங்களாக ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மத்தியஅரசு மாநிலங்களுக்கு வழங்காமல் இழுத்தடித்து வந்தது. இதற்கு எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், மாநில நிதி அமைச்சர்கள் மத்தியநிதி அமைச்சரை நேரில் சந்தித்தும் கோரிக்கை விடுத்தனர். அதுபோல தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது

தமிழ்நாட்டிற்கு மட்டும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. (ஐ.ஜி.எஸ்.டி.) நிலுவைத்தொகையாக ரூ.4,072.03 கோடியும், ஜி.எஸ்.டி. இழப்பீடாக ரூ.3,236.32 கோடியும் மத்திய அரசு வழங்க வேண்டி யுள்ளது. இதில், தற்போது   ரூ.1,898 கோடி வழங்கி இருப்பதாக  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.

‘இன்று 38-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பாக்கித் தொகையை உடனே வழங்க வலியுறுத்த இருப்பதாகவும்   அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.