18எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: இறுதி வாதம் ஆகஸ்டு 31ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை:

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்றுடன் வாதம் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வாதம் முடிவடையாததால், வழக்கின் விசாரணை வரும் 31ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

டிடிவி ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு 3வது நீதிபதி முன்பு நடைபெற்று வருகிறது.  இதுவரை அரசு தரப்பு வாதம், டிடிவி தினகரன் தரப்பு வாதம், தேர்தல் ஆணையம் தரப்பு வாதம் எல்லாம் முடிவடைந்து விட்ட நிலையில் சபாநாயகர் தரப்பில் இன்று வாதம் நடைபெற்றது.

ஆனால் சபாநாயகர்  வாதத்தை வழக்கறிஞர்  முடிக்க முடியாததால்  வழக்கின் விசாரணை  ஆகஸ்டு 31ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31ம் தேதியோடு அனைத்து வாதங்களும் முடிவடையும் என்று கூறப்பட்டுள்ளது