சென்னை:

ரும் 18ந்தேதி (திங்கட்கிழமை) மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயரதிகாரி கள் கூட்டம் நடைபெறும் என்று  தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்து உள்ளார்.

ஏப்ரல் 18ந்தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.

இந்தநிலையில், வருமி திங்கட்கிழமை  மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளோடு திங்கட்கிழமை தமிழக தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்த இருப்பதாக  தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்து உள்ளார்.

இன்று செய்தியளார்களிடம் இதை தெரிவித்தவர், தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற வாகன சோதனையில் 4 கோடியே 88 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், .சி விஜில் செயலி மூலமாக 297 புகார்கள் வந்துள்ளதாகவும் அதனை ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும்,  மக்களவைத் தேர்தலில் போட்டியிட 25 ஆயிரம் ரூபாய் முன்பணம் கட்ட வேண்டு மென்றும் தனித்தொகுதிக்கு  12 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும் என்றவர், இறுதி வாக்காளர் பட்டியலுக்குப் பின்னர் 5 லட்சத்து 22 ஆயிரம் பேர் புதிதாக வாக்காளர் படடியலில் இணைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

செய்தியாளர்கள் அவரிடம், கோவை எஸ்.பி. பாண்டியராஜன் மீது  மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உத்தரவிட்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு,   பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தமக்கு ஆட்சேபனை இல்லை என்றும் தெரிவித்தார்..