சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 5,795 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 3,55,449 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 1,186 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னையில் மட்டும் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்தம் எண்ணிக்கை 1,20,267ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாவட்டம் வாரியாக தொற்று பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில், இன்று 6,384 பேர் கொரோனாவில் இருந்து  குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 2,96,171 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 116 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,123 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில்,  32 பேர் தனியார் மருத்துவமனையிலும், 84 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,123 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு விவரம்:

சென்னை-1,186 கோவை-394 திருவள்ளூர்-393 செங்கல்பட்டு-315 சேலம்-295 தேனி-288 காஞ்சிபுரம்-257 கடலூர்-238 விருதுநகர்-184 வேலூர்-175 நெல்லை-151 ராணிப்பேட்டை-146 குமரி-122 திருவாரூர்- 120 தஞ்சை-114 திண்டுக்கல்-111 மதுரை-109, புதுக்கோட்டை-105 திருச்சி-99 தூத்துக்குடி-99 தி.மலை-95 ஈரோடு-85 விழுப்புரம்-69 நாகை-68 சிவகங்கை-67 தென்காசி-62 திருப்பூர்-61 க.குறிச்சி-58 அரியலூர்-51 திருப்பத்தூர்-51 ராமநாதபுரம்- 40 கரூர்-39 பெரம்பலூர்-37 நாமக்கல்-35 நீலகிரி -35 கிருஷ்ணகிரி-19 தர்மபுரி-18.

வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 6,017 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது/

வெளிநாடுகளில் இருந்து வந்த 885 பேர், உள்நாட்டு விமானங்களில் இருந்து வந்த 755 பேர், ரயில், பேருந்து, சொந்த வாகனங்கள் மூலம் வந்த 4377 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ரயில், விமானம், பேருந்து மற்றும் இதர வாகனங்களில் தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 6,21,641-ஆக அதிகரித்துள்ளது.