19/08/2020: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 2,22,94,372 ஆக உயர்வு…

ஜெனிவா: உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளை மிரட்டி வரும் சீனாவின் கொரோனா வைரஸ், இந்தியா, அமெரிக்கா உள்பட பல நாடுகளில் தனது கோர தாண்டவத்தை தொடர்ந்து வருகிறது.  இன்று நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 2கோடியே 22லட்சத்து 94ஆயிரத்து 372 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும்,  7லட்சத்து 83ஆயிரத்து 410 ஆக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும்  கொரோனா பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை இதுவரை 2,22,94,372  ஆக அதிகரித்து உள்ளது.

இதுவரை கொரோன  தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளோர் எண்ணிக்கை 1கோடியே 50லட்சத்து 37ஆயிரத்து 176 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர் எண்ணிக்கை  7லட்சத்து 83ஆயிரத்து 410 ஆக அதிகரித்து உள்ளது.

உலக நாடுகளில்  கொரோனா மொத்த பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதே வேளையில் ஒருநாள் பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,655,974 ஆகவும்,  இதுவரை  1. 75,074 பேர் உயிரிழந்தும் உள்ளனர். அதுபோல 3,011,098 பேர் தொற்று பாதிப்பில் இருந்துகுணமடைந்து உள்ளனர்.

2வது இடத்தில் பிரேசில் உள்ளது.  அங்கு இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோர் 3,411,872 ஆக உள்ளது. இதுவரை 1,10,019 பேர் தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ள நிலயில், இதுவரை 2,554,179 பேர் குணமடைந்து உள்ளனர்.

3வது இடத்தில் இந்தியா உள்ளது.  இந்தியாவில், கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,66,626 ஆக  உள்ளது. . இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போதைய நிலையில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 6லட்சத்து 76ஆயிரத்து 387 ஆக ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா  தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை 20,36,703 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும்  60,455 பேர் குணமடைந்து உள்ளனர். உயிரிழந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 53ஆயிரத்து 015 ஆக அதிகரித்து உள்ளது.