19/09/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்!

சென்னை: தமிழகத்தில் இன்று 5569 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு  எண்ணிக்கை 5,36,477ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 5556 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பி உள்ளனர். இதுவரை தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 4,81,273 ஆக உயர்நதுள்ளது.

இன்று ஒரே நாளில் 66 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை பலியானோர்  எண்ணிக்கை 8,751ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 987 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால்,  சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,54,624ஆக உயர்ந்துள்ளது.

“வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,569 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று ஒரே நாளில் 85,117 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் பரிசோதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 63,88,583 ஆக அதிகரித்துள்ளது.

இன்று பாதிக்கப்பட்டவர்களில் 3,351 பேர் ஆண்கள், 2,218 பேர் பெண்கள். 175 பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ளன.

இன்று மட்டும் 66 பேர் உயிரிழந்தனர். 30 பேர் தனியார் மருத்துவமனையிலும், 36 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,751 ஆக அதிகரித்துள்ளது.

You may have missed