19/09/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  இதுவரை மொத்தம் 5,30,908 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று மட்டும் 989 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
சென்னையில், கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,53,616 ஆக உள்ளது.
தற்போதைய நிலையில் 9,946 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை 1,40,633 பேர் சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போதுவரை 3037 பேர் உயிரிழந்து உள்ளனர்.
நேற்று மட்டும் 11,900 பேருக்கு தொற்று பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.
அதுபோல நேற்று ஒரே நாளில், சென்னையில் 452 காய்ச்சல் கிளினிக்குகள் நடத்தப்பட்டன. இதில்,  20,034 பேர் கலந்து கொண்டனர். அவர்களில்  1,064 அறிகுறி நோயாளிகள் COVID-19 க்கு அடை யாளம் காணப்பட்டு பரிசோதிக்கப்பட்டனர், மற்றவர்கள் சிறு வியாதிகளுக்கு மருந்துகள் வழங்கப்பட்டது.

சென்னையில் கடந்த 08-05-2020 முதல் 18-09-2020 வரை 48,788 காய்ச்சல் கிளினிக்குகள் நடத்தப்பட்டன. இதுவரை நடத்தப்பட்டுள்ள கிளினிக்குகளில் 25,42,066 பேர் கலந்து கொண்டனர், 1,49,032 அறிகுறி நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர் மற்றும் கோவிட் -19 க்கு பரிசோதிக்கப்பட்டனர், மற்றவர்கள் சிறு வியாதிகளுக்கு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.