வரலாற்றில் இன்று 
நவம்பர் 19 கிரிகோரியன் ஆண்டின் 323 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 324 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 42 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1493 – கொலம்பஸ் முதல் நாள் தான் கண்ட தீவுக்கு சான் ஜுவான் பட்டீஸ்டா எனப் பெயர் சூட்டினார்.
1816 – வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
1881 – உக்ரேனில் ஒடீசா நகரில் விண்கல் ஒன்று வீழ்ந்தது.
1946 – ஆப்கானிஸ்தான், ஐஸ்லாந்து, சுவீடன் ஆகியன ஐநாவில் இணைந்தன.
1969 – அப்போலோ 12 விண்கலத்தில் சென்ற சார்ள்ஸ் கொன்ராட், அலன் பீன் ஆகியோர் சந்திரனில் இறங்கி நடந்த மூன்றாவது, நான்காவது மனிதர்கள் என்ற பெயரினைப் பெற்றனர்.
1969 – பிரேசில் உதைப்பந்தாட்ட வீரர் பீலே தனது 1,000வது கோலைப் பெற்றார்.
1985 – பனிப்போர்: அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரேகன், சோவியத் அதிபர் மிக்கைல் கொர்பச்சோவ் இருவரும் ஜெனீவாவில் முதன் முறையாகச் சந்தித்தனர்.
1999 – மக்கள் சீனக் குடியரசு தனது முதலாவது சென்ஷோ விண்கலத்தை ஏவியது.
2005 – மகிந்தராஜபக்ச இலங்கையின் 5வது ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.
பிறப்புக்கள்
1831 – ஜேம்ஸ் கார்ஃபீல்ட், அமெரிக்காவின் 20வது குடியரசுத் தலைவர் (இ. 1881)

1835 – ராணி லட்சுமிபாய், இந்திய இராணி (இ. 1858)
1917 – இந்திரா காந்தி, இந்தியப் பிரதமர் (இ. 1984)
indira-gandhi-14
1925 – சலில் சௌதுரி, வங்காள இசையமைப்பாளர் (இ. 1995_
இறப்புகள்
1998 – டெட்சுயா ஃபுஜித்தா, யப்பானிய வானிலை அறிஞர் (பி. 1920)
2008 – எம். என். நம்பியார், நடிகர் (பி. 1919)
m-n-nambiyar-17719
சிறப்பு நாள்
மாலி – விடுதலை நாள்
இந்திய தேசிய ஒருமைப்பாட்டு தினம்
உலகக் கழிவறை நாள்