19/12/2020: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று 1,134 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 8,04,650 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக  சென்னையில் மட்டும் மொத்தம் 2,21,587 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று மட்டும் 341 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,21,587  ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று  3 பேர் உயிரிழந்துள்ளனர். . இதுவரை சென்னையில் மொத்தம் 3,938 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 791 பேருக்குத் தொற்று உள்ளது. தற்போதைய நிலையில், தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 9,781.

இன்று  எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 75,347. இதுவரை  மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,33,10,701.

மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 4,86,202 பேர். பெண்கள் 3,18,414 பேர். மூன்றாம் பாலினத்தவர் 34 பேர்.

இன்று தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 658 பேர். பெண்கள் 476 பேர்.

இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,170 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 7,82,915 பேர்.

இன்று   நோய்த் தொற்றினால் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.  வேர்களில்  7 பேர் தனியார் மருத்துவமனையிலும், 5 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 11,954 ஆக உள்ளது. இதுவரை சென்னையில் மொத்தம் 3,938 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் தற்போது 67 அரசு ஆய்வகங்கள், 167 தனியார் ஆய்வகங்கள் என 234 ஆய்வகங்கள் உள்ளன.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு: