டெல்லி: இந்தியாவில் கெரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. அதுவேளையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1லட்சத்து 45 ஆயிரமாக அறிவித்து உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்,   27 ஆயிரம் பேருக்கு பெருந்தொற்று உறுதியானதால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 5 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பு காரணமாக, இதுவரை  95 லட்சத்து 50 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போதைய நிலையில், நாடு முழுவதும 3 லட்சத்து 10 ஆயிரம் பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில், 1 லட்சத்து 6 ஆயிரத்து 920 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

நேற்று மட்டும் நாடு முழுவதும 340 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 லட்சத்து 80 ஆயிரத்து 116 ஆக அதிகரித்துள்ளது.

உலக அளவில் பெருந்தொற்று பாதிப்பில் இந்தியா தொடர்ந்து 2ம் இடத்தில் இருந்து வருகிறது