கமல்நாத் அரசுக்கு நெருக்கடி: சிந்தியாவை தொடர்ந்து 6 அமைச்சர்கள் உள்பட 19 எம்எல்ஏக்கள் ராஜினாமா……

டெல்லி

காங்கிரஸ் கட்சியில் இருந்து மத்தியபிரதேச காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா ராஜினாமைவைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உள்பட 19 எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்து உள்ளனர்.  தங்களது ராஜினாமா கடிதங்களை மாநில கவர்னருக்கு அனுப்பி உள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற மாநில சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவுடன் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. ஆனால், அங்கு முதல்வர் பதவி கேட்டு கமல்நாத்துக்கும், ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஆனால், ராகுல்காந்தி தலையிட்டு, சிந்தியாவை அமைதிப்படுத்தினார்.

இந்த நிலையில், சுமார் ஓராண்டுக்கு பிறகு, தற்போது, மாநில அரசுக்கு எதிராக சிந்தியா போர்க்கொடி தூக்கி உள்ளார். இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார்.

இதையடுத்து, அவரது ஆதரவாளர்களான 6 மாநில அமைச்சர்கள் உள்பட 19 எம்எல்ஏக்கள் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்து உள்ளனர். தற்போது அவர்கள் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள உள்ளனர்.

இதற்கிடையில், தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பெங்களூ காவல்துறைகர்நாடக டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதி உள்ளார்கள். அந்த கடிதத்தில்,  “நாங்கள் சில முக்கியமான பணிகளுக்காக தானாக முன்வந்து கர்நாடகாவுக்கு வந்துள்ளோம், நாஙகள் பெங்களூரு மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் தங்க இருக்கிறோம்… எங்களுக்கு  பாதுகாப்பு தேவைப்படுகிறது  என்று தெரிவித்து உள்ளனர்.

இதன் காரணமாக மாநில காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி கவிழும் வாய்ப்பு உருவாகி உள்ளது…

You may have missed