19 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழகஅரசு நடவடிககை

--

சென்னை:

மிழ்நாட்டில் 19 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியகா பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழகஅரசின் உள்துறை செயலாளர் பிறப்பித்துள்ளார்.

மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் சரவணன் கடலூர் காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

திருவாரூர் எஸ்.பி. மயில்வாகணன் மயிலாப்பூர் துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிபிசிஐடி எஸ்.பி. பிரவேஷ்குமார் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், வேலூர் எஸ்.பி. பகலவன் சென்னை போக்குவரத்து வடக்கு காவல் துணை ஆணையராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை எஸ்.பி. பொன்னி, திருவள்ளூர் எஸ்.பி.யாகவும், திருவள்ளூர் எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி திருவண்ணாமலைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

சென்னை பூக்கடை காவல் துணை ஆணையராக சாம்சனும், சென்னை க்யூ பிராஞ்ச் சிஐடி எஸ்.பி.யாக தர்மராஜனும்,

திருவாரூர் எஸ்.பியாக விக்கிரமனும், நாகப்பட்டினம் எஸ்.பி.யாக விஜயகுமாரும், கோயம்புத்தூர் மாவட்ட எஸ்.பி.யாக பாண்டியராஜனும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.