கேரளாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா: ஒரே நாளில் 19 பேருக்கு பாதிப்பு

திருவனந்தபுரம் : கேரளாவில் இன்று  ஒரேநாளில் 19 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அம்மாநில அரசு  தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் உலக நாடுகளை இன்னும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதுதொடர்பாக முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது: கேரளாவில் புதிதாக 19 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 12 பேர் வெளிநாடு சென்று வந்தவர்கள்.

மொத்தம் 117 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் கண்ணூரில் 10 பேர், பாலக்காட்டில் 4 பேர், காசர்கோட்டில் 3 பேர் , மலப்புரம் மற்றும் கொல்லத்தில் தலா ஒருவர் என 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார்.