பாகிஸ்தான்: இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 19பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் நடைபெற்ற சாலை விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

bus

பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் நகரில் தேரா காஜி கான் பகுதியில் சென்றுக்கொண்டிருந்த இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டன. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி 15பேர் உயிரிழந்த நிலையில் 4பேர் மருத்துவமனையில் இறந்தனர்.

இந்த விபத்தில் 40 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகைய கோர விபத்திற்கு அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அதிபர் ஆரிப் ஆல்வி ஆகியோர் இரங்கல் மற்றும் வருத்தத்தினை தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ உதவிகளை வழங்கும்படி உள்ளூர் அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

You may have missed