19,427 தற்காலிக ஆசிரியர், ஊழியர்கள் நிரந்தர பணியாளர்களாக மாற்றம்: அரசாணை வெளியீடு

சென்னை:

ரசு பள்ளிகளில் பணியாற்றி வந்த தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத 19,427 பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றுவதற்கான  அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த சட்டமன்ற மானிய கோரிக்கை கூட்டத்தொடரின்போது, தற்காலிக ஆசிரியர்கள், தற்காலிக பணியாளர்கள்,  நிரந்தர ஊழியர்களாக மாற்றப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், அவர்களில் முதல்கட்டமாக 19,427 தற்காலிக ஆசிரியர், ஊழியர்கள் நிரந்தர பணியாளர்களாக மாற்றி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

பள்ளிக் கல்வித்துறையில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாகவும், தற்காலிக பணியிடங்களாகவும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.  இவற்றுள் தற்காலிக பணியிடங்களுக்கு பணியிட தொடர் நீட்டிப்பு வழங்குவதில் ஏற்படும் காலதாமத்தை தவிர்க்கும் பொருட்டு முதற்கட்டாக  முதல்வரின் ஆணைப்படி 17 ஆயிரம் தற்காலிக பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான  அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.