அபராதம் ரூ.1 கோடியை தாண்டியது: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை (18ந்தேதி) 1,94,339 வாகனங்கள் பறிமுதல்

சென்னை:

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்,  சட்டத்தை மீறி வெளியே செல்வோர் வாகனங்களை காவல்துறையினர்  பறிமுதல் செய்தும், வழக்கு பதிவு செய்தும், அபராதம் விதித்தும் வருகின்றனர்.

இன்று காலை நிலவரப்படி (18-02/2020), தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1லட்சத்துக்கு 94 ஆயிரத்து 339 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதுபோல அபராதமும் ரூ.1 கோடியை தாண்டியுள்ளது.

மேலும்,  2லட்சத்து 14ஆயிரத்து  951 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.  ஊரடங்கை மீறியதாக இதுவரை  2லட்சத்து 28 ஆயிரத்து 823 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ.1 கோடியே, 06லட்சத்து 74ஆயிரத்து 294  அபராதம் வசூலிக்கப்பட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .