‘1945’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு…!

‘மடை திறந்து’ தெலுங்கில் ‘1945’ என்று பெயரிட்டனர். யுவன் இசையமைப்பில் உருவாகும் இந்தப் படம், நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் உள்ளது. கே.ராஜராஜன் தயாரித்து வருகிறார்.

தீபாவளியை முன்னிட்டு ‘1945’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது .

நடிகர் ராணா தனது ட்விட்டர் பதிவில், “பண விஷயத்திலும், படத்தை முடிப்பதிலும் தவறிய ஒரு தயாரிப்பாளரின் முடிக்கப்படாத படம் இது என பதிவிட்டார் .

படத்தின் தயாரிப்பாளரைக் கடுமையாக தாக்கிய இந்த பதிவு அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்கியது .

“ஒரு படம் நிறைவு பெற்றதா, இல்லையா என்று அந்தப் படத்தின் இயக்குநர்தான் முடிவு செய்யவேண்டும் என ராணாவிற்கு தயாரிப்பாளர் ராஜராஜன் பதிவிட்டார் .

ஆனால், இந்தப் படத்தின் இயக்குநர் சத்ய சிவா தனது ட்விட்டர் பதிவில், “மூன்று ஆண்டுகள் கழித்து என் படத்தின் பணிகள் முடிவடைந்து, இன்று ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

ராணா – தயாரிப்பாளர் ராஜராஜன் மோதல் தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில் எதையும் தெரிவிக்கவில்லை இயக்குநர் சத்ய சிவா.

கார்ட்டூன் கேலரி