இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,459 பேருக்கு கொரோனா, 380 பேர் உயிரிழப்பு… மத்திய சுகாதாரத்துறை

டெல்லி:

ந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,459 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 380 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும்  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பேயாட்டம் ஆடி வருகிறது. நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால், தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உச்சமடைந்து வருகிறது.

இந்தியாவில் திய கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

கடந்த 24 மணி  நேரத்தில் மேலும் புதிதாக 19,459 பேர் ப கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும்,  இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,48,318 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் சிகிச்சை பலனின்றி 380 பேர் உயிரிழந்துள்ளதைத் தொடர்ந்து, இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,475 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் இதுவரை  3,21,723 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாடுமுழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 2,10,120 ஆக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் அதிகபட்சமாக மகாரஷ்டிரா மாநிலத்தில் 1,64,626 பேரும், தலைநகர் டெல்லியில் 83,077 பேரும் தமிழ்நாட்டில் 82,275 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,70,560 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக வும் இதுவரை செய்யபட்டுள்ள மொத்த பரிசோதனைகளில் எண்ணிக்கை 83,98,362 ஆக உள்ளதாகவும்   தெரிவிக்கப்பட்டு உள்ளது.

You may have missed