கேரளாவில் இன்று 195 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை கடந்த ஒட்டுமொத்த பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதிதாக 195 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் பரவலாக பாதிப்பு அதிகரித்து வந்த நிலையிலும், கேரளாவில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால் வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களால் கேரளாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இந் நிலையில், இன்று புதிதாக 195 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதன் மூலம் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 072 ஆக அதிகரித்துள்ளது.

இன்று வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 118 பேர் வெளி நாடுகளில் இருந்து வந்தவர்கள். 62 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். மீதமுள்ள 15 பேர் உள்மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

இன்று மட்டும் 102 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,108 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு கேரளாவில் இதுவரை 22 பேர் பலியாகி இருக்கின்றனர்.