மகாராஷ்டிராவில் இன்று 198 போலீசாருக்கு கொரோனா தொற்று..!

மும்பை: மகாராஷ்டிராவில் இன்று 198 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டிலேயே கொரோனா தொற்றுகள் அதிகம் பதிவான மாநிலம் மகாராஷ்டிரா. காவல்துறையினரும் அதிகம் பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இந் நிலையில் இன்று புதியதாக 198 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் அங்கு இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட போலீசாரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 21,152 ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 17,295 போலீசார் குணமடைந்துவிட்டனர். 217 போலீசார் கொரோனா பாதிப்பால் உயிரிழந்து உள்ளனர். இன்னமும், 3,640 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.