ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பூமி. விவசாயிகளைப் பற்றி பேசும் கதையாக உருவாகி இருக்கும் இதில் ஹீரோயினாக நிதி அகர்வால் நடித்திருக் கிறார். டி.இமான் இசை அமைத்திருக் கிறார். இப்படத்தை லக்‌ஷ்மன் இயக்கி உள்ளார்.

ஜெயம் ரவிக்கு நாளை பிறந்தநாள் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக தமிழன் என்று சொல்லடா என்ற பாடலை அனிருத் தனது இணைய தள பக்கத்தில் வெளியிடுகிறார். இப்பாடலை அனிருத் உச்ச குரலில் பாடி இருக்கிறார்.


ஜெயம் ரவி ஏற்கனவே தந்து பிறந்த தினத்தை நற்பணிகள் செய்தும் சமூக இடைவெளி கடைபிடித்தும் கொண் டாடும்படி கேட்டுக்கொண்டிருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.