டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்சில் 235 ரன்கள் மட்டுமே எடுத்த ஆஸ்திரேலியா!

இந்தியா உடனான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அஸ்திரேலிய அணி 235 ரன்களை மட்டுமே எடுத்து இந்தியாவை காட்டிலும் 15 ரன்கள் பின் தங்கியுள்ளது. மூன்றாவது நாள் ஆட்டம் இரண்டு முறை மழை காரணமாக தாமதமாக தொடங்கப்பட்டது.

ind

ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. டி20 போட்டி ஏற்கெனவே முடிந்த நிலையில் தற்போது முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் அடிலெய்டில் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதல்நாள் முடிவில் இந்திய அணி 9விக்கெட் இழப்பிற்கு 250 ரன்களை எடுத்திருந்தது. அதன்பின்னர் நடந்த 2வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

இந்நிலையில் 3வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆனால் களத்திற்கு வீரர்கள் வருவதற்கு முன்பாகவே மழை பெய்ததால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. 45 நிமிட தாமதத்திற்கு பிறகு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார்க், பும்ரா பந்து வீச்சில் வெளியேறினார். அதன்பிறகு மீண்டும் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் நட்ப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இதையடுத்து உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. அதன்பிற்கு விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 98.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 235 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.

இதன்மூலம் இந்திய அணி முதல் இன்னிங்சில் 15 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.