ஆஸ்திரேலியாவிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்யாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ள இந்திய அணி 3டி20, 4டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஏற்கெனவே டி20 போட்டிகள் முடிந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டி மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

india

முதல் இன்னிங்சில் இந்திய அணி 250 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆஸ்திரேலியா 235 ரன்களை மட்டுமே சேர்த்த்திருந்தது. அதன்பின்னர் 15 ரன்கள் முன்னிலை வகித்த இந்திய அணி 2வது இன்னிங்சில் 307 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 323 ரன்களை இலக்காக கொண்டு ஆஸ்திரேலிய அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது.

ஆனால், ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். அந்த 4வது நாள் ஆட்ட முடிவில் 4விக்கெட் இழப்பிற்கு 104 ரன்களை எடுத்திருந்தது. மார்ஷ் 31 ரன்களுடனும், ஹெட் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் 5வது நாளான இன்று 219 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த ஷேன் மார்ஷ் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து 200 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகள் சரிந்ததால் ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இறுதியாக நம்பிக்கையுடன் போராடிய ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் ஜோடி 28 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 291 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி 31 ரன்கள் வித்யாசத்தில் வெற்றிப்பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. 2வது டெஸ்ட் போட்டி வரும் 14ம் தேதி தொடங்குகிறது.