2ஜி பின்னணியில் இருந்தது ஸ்டாலின்தான்; கனிமொழி பலி ஆடு : வைகோ அதிரடி

Kani_stalin

2ஜி ஸ்பெக்ட்ரம் பின்னணியில் இருந்தது திமுக பொருளாளர் ஸ்டாலின்தான் . வேண்டுமானால் இதற்காக என் மீது வழக்குப் போடட்டும். அதை சந்திக்கத் தயாராக உள்ளசதாக

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தப்போது, தேமுதிகவுடன் கூட்டணி சேர திமுக 500 கோடி பேரம் நடத்தியதாக வைகோ கூறியதால், திமுக நோட்டீஸ் அனுப்பியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு வைகோ, ’’திமுக சார்பில் நேற்று இரவு எனக்கு தாக்கீது கொடுக்கப்பட்டிருக்கிறது. கூறிய வார்த்தையை திரும்பப் பெறவில்லை எனில் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குத் தொடரப்படும் எனக் கூறப்பட்டிருக்கிறது. என் மீது வழக்குத் தொடர்ந்ததற்கு மகிழ்ச்சி.

2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி பலி ஆடு ஆக்கப்பட்டிருக்கிறார். கோடிக்கணக்கில் கொள்ளையடித்த கருணாநிதி குடும்பத்தினர் திரைமறைவில் பதுங்கிக் கொண்டனர்.

ஷாகித் பாவ்லா சென்னை வந்து மு.க.ஸ்டாலினைச் சந்தித்த போது என்ன பரிமாற்றம் நடந்தது. கோடிக்கணக்கில் வழங்கப்பட்ட டிடி. யாரிடம் கொடுக்கப்பட்டது. ஷாகித் பாவ்லா- ஸ்டாலின் சந்திப்பை சிபிஐயிடம் சொன்ன பெரம்பலூர் சாதிக் பாட்ஷா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார்.

சாதிக் பாட்ஷா மரணத்தின் பின்னணி, என்ன நடந்தது என்பதை சிபிஐ தீவிரமாக விசாரிக்க வேண்டும் என பிரதமரை வலியுறுத்தியுள்ளேன். சாதிக் பாட்ஷா தற்கொலைக்கு திமுக தான் காரணம் எனக் குற்றஞ்சாட்டுகிறேன்.

இதற்கு வழக்குப் போட வக்கிலாத திமுக பொருளாளர் ஸ்டாலின், தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க திமுக பேரம் நடத்துகிறது என நாளிதழ்களில் வந்த செய்தியைக் குறிப்பிட்டு நான் பேசியதைக் காரணம் காட்டி எனக்கு வழக்குரைஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள்.

தற்போது மேலும் ஒரு குற்றச்சாட்டைத் தெரிவிக்கிறேன். 2 ஜி ஸ்பெக்ட்ரம் பின்னணியில் இருந்தது ஸ்டாலின்தான். வேண்டுமானால் என் மீது மற்றொரு வழக்குப் போடப்பட்டும . அதை சந்திக்க தயாராக உள்ளேன்’’ என்றார் அதிரடியாக.