2வது டெஸ்ட்: இந்திய அணிக்கு 287 ரன்கள் இலக்கு!

இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 243 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து இந்திய அணிக்கு 287 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

match

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 3 டி-20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லாத இந்திய அணி அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் 31 ரன்கள் வித்யாசத்தில் வெற்றிப்பெற்றது. இதையடுத்து, இந்திய அணி 1-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இரு அணிகளும் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடக்கிறது. இதன்
முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 326 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, இந்திய அணி 283 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்த டெஸ்ட் தொடரின் 3வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை எடுத்து முன்னிலை வகித்தது.

அதன்பின்னர் இன்று 4வது நாள் ஆட்டம் தொடங்கியது. இதில் பும்ரா, ஷமி உள்ளிட்டோரின் அசத்தல் பந்து வீச்சில் சுருண்ட ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 243 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதையடுத்து இந்திய அணிக்கு 287 ரன்கள் இலக்காக நிர்ணையிக்கப்பட்டது.