சென்னை,
காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதி இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் என மு.க.ஸ்டாலில் தெரிவித்து உள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு, ஏற்கனவே உட்கொண்ட மருந்து ஒத்துக்கொள்ளாமல் ஒவ்வாமை ஏற்பட்டது. இதனால் உடலில் கொப்பளங்கள் தோன்றின. இதற்கு வீட்டிலேயே அவர் சிகிச்சை பெற்றார்.
அதைத்தொடர்ந்து கடந்த 1-ந் தேதி உடல்நல குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் அனுமதிக்கப்பட்டு, 7ந்தேதி வீடு திரும்பினார்.
 
 
 
தொடர்ந்து ஓய்வு எடுத்து வந்த நிலையில் கருணாநிதியின் உடல்நிலையில் கடந்த 15-ந்தேதி இரவு மீண்டும் பாதிப்பு ஏற்பட்டது.  மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட அவரை உடனடியாக மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவருக்கு நுரையீரல் மற்றும் தொண்டையில் தொற்று ஏற்பட்டிருப்பதால் தொண்டையில் துளை போடப்பட்டு சுவாச குழாய் (டிரக்கியாஸ்டமி) பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திமுக தலைவரை பார்த்து உடல்நலம் குறித்து விசாரிக்க அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி டெல்லயில் இருந்து சென்னை வந்து, மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து, ஸ்டாலின் மற்றும் மருத்துவர்களிடம் விசாரித்து சென்றார்.
தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா உலக பிரபலங்கள் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்து விரைவில் நலம் அடை வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
அவர், நாற்காலியில் அமர்ந்து டி.வி. பார்க்கிறார், பத்திரிகைகளையும் படிக்கிறார். இருப்பினும் இன்னும் சில தினங்கள் கருணாநிதி ஆஸ்பத்திரியிலேயே தங்கி இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
கருணாநிதியின் உடல்நிலை சீரானதை தொடர்ந்து இன்னும் 2 நாட்களில் வீடு திரும்புவார் என்று கருணாநிதியின் மகனும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தெரிவித்தார்.
தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் பிறந்த நாளையொட்டி அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த மு.க. ஸ்டாலின் இதனை உறுதி செய்தார்.
 
 
DMK leader will return home in two days. M.K . Stalin  announces in a press Conference.