யக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் 2.0.

பெரும் பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படம் இந்த ஆண்டு  தீபாவளிக்கு 2.0 வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பிறகு அடுத்த ஆண்டு குடியரசுத் தினம் அன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படத்தின் இயக்குநர் ஷங்கர் அறிவித்துள்ளார். இதனால்  ரஜினி ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.