“காலா’வை முந்தும் 2.0

ரும் 2018 ஜனவரியில் (பொங்கல் அன்று) ரஜினி நடிக்கும் ‘2.0’  படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பிறகு இப்படத்தின் வெளியீடு ஏப்ரல் மாதத்தில் என்று தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து பொங்கல் அன்று காலா வெளியாகும் என்று பேச்சு அடிபட்டது. இந்த நிலையில்,  காலா படத்தை தயாரிக்கும்  தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தனது ட்விட்டர் கணக்கில், “பல்வேறு செய்திகள் வெளியாகி இருப்பது போல், ஜனவரி மற்றும் பொங்கல் வெளியீட்டிற்கு ‘காலா’ தயாராகாது (Contrary to rumours and articles, #Kaala would not be ready for a January nor Pongal release)” என்று தெரிவித்திருக்கிறது.

2.0 படம் வெளியான பிறகே, காலா திரைப்படத்தை வெளியிட ரஜினி திட்டமிட்டுள்ளார் என்று கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.

காரணம், 2.0 முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படம். ஆனால் காலா திரைப்படத்தில் பாழுதுபோக்கு காட்சிகளோடு அரசியல் வசனங்களும் நிறைய இருக்கின்றன. அது தனது அரசியல் என்ட்ரிக்கு உதவும் என்ரு ரஜினி கருதுவதாகச் சொல்லப்படுகிறது.

மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகாண்ட காலா பட இயக்குநர் ரஞ்சித், அப்படத்தல்  வலுவான அரசியல் இடம்பெற்றுள்ளதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

ஆக.. காலாவை முந்திக்கொண்டு ரசிகர்களுக்கு விருந்து படைக்கப்போவது 2.0 தான்!