ரஜினியின் 2.0 படத்திற்கு யு/ஏ சான்றிதழை வழங்கியது தணிக்கைக் குழு!!

ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள 2.0 படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘எந்திரன்’. மிகப்பெரிய பொருட்செலவில் உருவான இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

2.0

இதைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ படம் சில ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது. ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முழுவதுமாக முடிந்து, திரைப்படமானது வரும் நவம்பர் 29ம் தேதி ரிலீஸ் செய்வதற்கு தயாராக உள்ளது. இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன் இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பிரமிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தணிக்கைக்கு அனுப்பப்பட்ட இந்தத் திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதுமட்டுமின்றி, விலங்குகள் நல ஆணையத்திடம் இருந்து இப்படத்திற்குத் தடையில்லா சான்றிதழும் கிடைத்துள்ளதால், படம் வெளியாவதில் எவ்வித சிக்கலும் இருக்காது என படக்குழுவினரால நம்பப்படுகிறது.