டில்லி:

ஆண் குழந்தைகள் மீதான மோகம் காரணமாக இந்தியாவில் 2.10 கோடி சிறுமிகள் தேவையில்லை என்று ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டின் வருடாந்திர பொருளாதார சர்வே அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் தான் இத்தககவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதில் 2017&18ம் ஆண்டில் பல தம்பதிகள் ஆண் குழந்தை பெற்றுக் கொள்ள முக்கியத்துவம் அளித்துள்ளனர். இதற்காக அவர்கள் தொடர்ந்து குழந்தைகள் பெற்று வ ந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ‘‘நாட்டின் மக்கள் தொகையில் 6.30 கோடி பெண்கள் மாயமாகியுள்ளனர். ஆண்டுதோறும் 20 லட்சம் பெண்கள் மாயமாகி வருகின்றனர். ஆண் குழந்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து பெண் குழ ந்தைகளை கருவிலேயே கலைக்கும் சம்பவங்கள் நடந்துள்ளது. அதோடு சிறுமிகள் ஊட்டச்சத்து குறைபாடு, புறக்கணிப்பு, நோய் காரணமாக பாதித்துள்ளனர்.

இந்த விவகாரம் இந்தியாவின் ஒட்டு மொத்த சமுதாயத்திடமும் எதிரொலிக்கிறது. இதற்க பொருளாதாரம் மற்றும் கலாச்சார விஷயங்கள் காரணமாக உள்ளது. சொத்துக்கள் மகனுக்கு பதிலாக மகளுக்கு செல்வது, திருமணத்திற்கு வரதட்சனை கொடுப்பது, மகள் கணவர் வீட்டிற்கு செல்வது போன்ற காரணங்களால் ஆண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

‘‘இந்தியாவில் பாலியல் சதவீத வேறுபாடு அதிகளவில் உள்ளது. வளர்ந்த மாநிலங்களான வடக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் 7 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஆயிரத்து 200 பேருக்கு, ஆயிரம் சிறுமிகள் உள்ளனர். 1991 மற்றும் 2011ம் ஆண்டு இடையில் வருவாய் அதிகரித்தபோதும் பாலியல் விகிதாச்சாரம் சரிவை சந்தித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் 10 ஆண்டுகளாக பாலியல் வேறுபாட்டை தீர்க்க எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகள் மூலம் இந்தியாவில் முன்னேற்றம் ஏற்ப்பட்டுள்ளது. கல்வி, முடிவெடுக்கும் அதிகாரம், வீட்டு உபயோக பொருட்கள் வாங்குதல் போன்றவற்றில் பெண்களுக்கு அனுமதி வழங்கப்படுவதை காண முடிகிறது’’ என்று அந்த அறி க்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.