வுகாத்தி

சாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக 2.75 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்புக்குள்ளாகி அவதிப்படுகின்றனர்

அசாம் மாநிலத்தின் சுபன்ஸ்ரீ ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தினால் 7 மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின.  லட்சுமிபூர், ஜோர்ஹாத், கோலாகாட், சசார், தேமாஜி, பிஸ்வநாத், மற்றும் கரிம்கன்ச் மாவட்டத்தில் 2,75 லட்சம் மக்களுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த 7 மாவட்டங்களில் சுமார் 500 கிராமங்கள் வெள்ளத்தில் முழுகிவிட்டதாகவும், 8000 ஹெக்டேர் விளைநிலங்களில் உள்ள பயிர்கள் நாசமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  கரீம்கன்ச் மாவட்டத்தில் அதிகபட்சமாக 1.59 லட்சம் மக்களும், லட்சுமிபூரில் 81000 மக்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் 228 முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன, அவற்றில் 14613 பேர் தஞ்சம் புகுந்துள்ளனர்.  பல தடுப்பணைகள், பாலங்கள், சாலைகள் ஆகியவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன.

அரசின் சார்பில் மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.