தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2.78 லட்சம்..!

சென்னை: தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2.78 லட்சம் பேராக அதிகரித்து உள்ளது.

தமிழகத்தில் இன்று புதியதாக 5,950 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 3,38,055 ஆக அதிகரித்து உள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 70,450 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. ஒட்டு மொத்த பரிசோதனைனகளின் எண்ணிக்கை  37,11,246 ஆகும்.  கொரோனா தொற்றில் இருந்து இன்று ஒரே நாளில் 6,019 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.

ஒட்டு மொத்தமாக கணக்கிட்டால் கொரோனாவில் இருந்து இதுவரை 2,78,270 பேர் மீண்டுள்ளனர். ஒரே நாளில் 125 பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,766 ஆக உயர்ந்து இருக்கிறது.