தமிழ் திரைப்பட ஷூட்டிங் ஸ்பாட்டில் தொழிலாளிக்கு கத்திக் குத்து

வில்லியனூர்

வில்லியனூரில் நடைபெற்ற தமிழ் திரைப்பட உணவு இடைவேளையில் ஒரு தொழிலாளி கத்தியால் குத்தப்பட்டதால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாண்டி மாநிலம் வில்லியனூரில் திருக்காமீசுவரர் கோவில் அமைந்துள்ளது.   இந்த்கு திரைப்பட படப்பிடிப்பு அடிக்கடி நடைபெறுவது வழக்கம்.   இந்த கோவிலில் நேற்று ஒரு த்மிழ் திரைப்பட படப்பிடிப்பு நடந்தது.   இந்த திரைப்படத்தில் பிரபுதேவா மற்றும் கேதரின் தெரசா நடிக்கின்றனர்.   படப்பிடிப்பைக் கான ஊர் மக்கள் பெரும் திறளாக வந்திருந்தனர்.

திரைப்பட நிறுவன  தொழிலாளர்களுக்கு அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் உணவு வழங்கப்பட்டது.   அந்த படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்த ராஜ்குமார் மற்றும் பெருமாள் என்பவர் தங்களுக்கும் உணவு வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளனர்.  உணவு பரிமாறிக் கொண்டிருந்த ஊழியர் அதற்கு மறுத்துள்ளார்.  திரைப்பட நிறுவன தொழிலாளர்களுக்கு மட்டுமே உணவு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அதனால் ஏற்பட்ட தகராறில் ராஜ்குமார் மற்றும் பெருமாள் ஆகிய இருவரும் வாழை இலையை நறுக்க வைத்திருந்த கத்தியை எடுத்து ஊழியரை அவருடைய தோளில் குத்தி உள்ளனர்.    இதில் காயம் அடைந்த ஊழியருக்கு முதலுத்வி சிகிச்சை அளிக்கப்பட்டது.   அவர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு   மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்த ஊழியர் அளித புகாரின் பேரில் கத்தியால் குத்திய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.