சட்டவிரோதமாக மான் வேட்டையில் ஈடுபட்ட 2 பேர் கைது

சேலம்:
சேலம் மாவட்டம் வனப்பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மாதையன், பெரியசாமி. இவர்கள் இருவரும் சேலம் மாவட்ட வனப்பகுதியில் மான், முயல் வேட்டையில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது.

இதையடுத்து மாதையன், பெரியசாமி ஆகிய 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், மாதையன், பெரியசாமி இருவரும் நாட்டுத்துப்பாக்கியை பயன்படுத்தி மான், முயலை வேட்டையாடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளனர்.