சிறுமி பலாத்கார குற்றவாளிகளை ஆதரித்த 2 பாஜக அமைச்சர்கள் ராஜினாமா

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் பாஜக, பிடிபி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதிலிருந்து பா.ஜ.க அமைச்சர்கள் சந்திர பிரகாஷ் கங்கா மற்றும் லால் சிங் இருவரும் மாநில பா.ஜ.க தலைவர் சத் சர்மாவிடம் தங்கள் ராஜினாமா கடித்ததை கொடுத்தனர்.

கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவ குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடந்த பேரணியில் இந்த இருவரும் கலந்துகொண்டதாக புகார் எழுந்தது.

இதனால் காஷ்மீரில் பாஜக, பிடிபி கூட்டணியில் பிளவு ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து 2 அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.