டில்லி:

ந்திராவில் ஓடும் ரெயிலின் இரண்டு பெட்டிகள் தீ பிடித்து எரிந்தன. தீயுடன் ரெயில் செல்லும் வீடியோ காட்சி  வைரலாக பரவி வருகிறது.

ஆந்திர சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் என்ற ஏசி ரெயிலின் இரண்டு பெட்டிகள் திடீரென தீ பிடித்து எரிந்தன. உயர் மின் அழுத்தம் காரணமாக ரெயில் பெட்டிகள் தீ பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இருந்து டில்லி சென்றுகொண்டிருந்த ஆந்திர சூப்பர் பாஸ்ட் ஏசி  எக்ஸ்பிரஸ் ரெயில் மத்தியபிரதேச மாநிலம் குவாலியர் அருகே பிர்லா நகர் ரெயில்நிலையம் அருகே  சென்று கொண்டிரு ந்தபோது ரெயில் பெட்டியில் தீ பிடித்தது.

ஓடிக்கொண்டிருக்கும் ரெயிலின் பெட்டியில் தீ பிடித்ததால் அந்த பெட்டியில் இருந்த பயணிகள் உடடினயாக ரெயிலை நிறுத்தினா. இந்த தீ விபத்தானது பி-6 மற்றும் பி-7 பெட்டிகளில். இன்று காலை 11.30 மணி அளவில் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீ அணைத்தனர். மேலும் ரெயில் நிலையம் அருகே இந்த விபத்து ஏற்பட்டதால் உடடினயாக சேதம் தவிர்க்கப்பட்டது.

அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் யாரும் காயமோ எந்தவித சேதமோ ஏற்படவில்லை என்று ரெயில்வேதுறை செய்தி தொடர்பாளர் வேத் பிரகாஷ் தெரிவித்து உள்ளார்.

அதிக அழுத்தமான மின்வயர் அறுந்து விழுந்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று ரெயில்வே பிஆர்ஓ மனோஜ்குமார் தெரிவித்துள்ளார்.

தீ விபத்து காரணமாக தீ பிடித்த இரண்டு பெட்டிகளும் அகற்றப்பட்டு, ரெயில் டில்லி புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.

ரெயில்பெட்டி தீ பிடித்து எரியும் வீடியோ…