Random image

ரூ. 60 கோடி ஜிஎஸ்டி மோசடி : கான்பூரில் இரு தொழிலதிபர்கள் கைது

கான்பூர்

கான்பூரில் இரு தொழிலதிபர்கள் ரூ. 60 கோடி ஜிஎஸ்டி வரி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் நகரில் மனோஜ் குமார் ஜெயின் மற்றும் சந்திர பிரகாஷ் தாயல் ஆகிய இரு தொழில் அதிபர்கள் பல நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.    இவர்கள்  மீது ஜி எஸ் டி அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.   அதை ஒட்டி இவர்களை லக்னோ பிரிவு ஜிஎஸ்டி உளவுத் துறை கண்காணித்து வந்தது.   அப்போது இந்த இருவரும் கான்பூரில் பல இடங்களில் அலுவலகங்கள் வைத்திருந்தது தெரியவந்தது

அந்த அலுவலகங்களில் அதிகாரிகள் சோதனை இட்டுள்ளனர்.   சோதனையில் இவர்கள் பல நிறுவனங்களுக்கு போலி ஜிஎஸ்டி பில்களை அளித்துள்ளது தெரிய வந்துள்ளது.    அந்த பில்கள் மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஜிஎஸ்டி உள் வரியீட்டை திரும்பப் பெறும் வகையில் அந்த பில்கள் அளிக்கப்பட்டிருந்தன.   அதாவது ஜி எஸ் டி செலுத்தாமலே அந்த பணத்தை திரும்பப் பெற இந்த பில்கள் உதவும்.

இவ்வாறு இந்த நிறுவனம் சிமெண்ட், தார், கச்சா பொருட்கள், பிளாஸ்டிக் துகள்கள், உலோகங்கள் உள்ளிட்ட பல பொருட்களை விற்பனை செய்யாமலே செய்ததாக போலி பில்கள் அளித்துள்ளது.

கடந்த ஒரு வருடத்தில் இந்த நிறுவனம் இது போல சுமார் ரூ.400 கோடி மதிப்புள்ள போலி பில்களை அளித்துள்ளது.   அதன் மூலம் ரூ. 60 கோடி ஜிஎஸ்டி மோசடி நடைபெற்றுள்ளது.    அத்துடன் இந்த பொருட்கள் அந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டதாக போலி ஈ வே பில்களும் அளித்துள்ளன.

அரசை ஏமாற்றா இந்த பில்களுக்கான தொகையை முழுமையாக இந்த தொகையை இந்த தொழிலதிபர்கள் வங்கி மூலம் வசூல் செய்துள்ளனர்.    அதன் பிறகு அதிலிருந்து தங்களுடைய கமிஷனை கழித்துக் கொண்டு மீதத் தொகையை அந்தந்த நிறுவனங்களுக்கு தொகையாக திரும்ப கொடுத்துள்ளனர்.

தற்போது இந்த இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது.