சத்திஸ்கரில் மாவோயிஸ்டுகள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு: 10 பேர் பலி!

சுக்மா:

த்திஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடைபெற்று வந்த துப்பாக்கி சண்டையில் 8 மாவோயிஸ்டுகள், 2 காவலர்கள் உள்பட 10 பேர் பலியானார்கள்.

சத்தீஸ்கர் மாநிலத்தில்  மாவோயிஸ்டுகள் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதை ஒடுக்க மாநில மற்றும் மத்திய அரசுகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. அவ்வப்போது காவல் துறையினர்மீது மாவோயிஸ்டுகள் தாக்குல்கள் நடத்தி வருகின்றனர்.

சத்திஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.ஆனால், மக்களை அதை புறக்கணித்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம்  12ந்தேதி மற்றும் 20ந்தேதி காவல்துறையினர் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல்கள் நடத்திய நிலையில், 20ந்தேதி நடத்திய திடீர் தாக்குதலுக்கு 2 காவல்துறையினர் உள்பட  அரசு தொலைக்காட்சி நிறுவனமான தூர்தர்ஷனை சேர்ந்த ஒளிப்பதிவாளர் ஒருவரும் கொல்லப்பட்டார்.

தேர்தல் பணிகள் தொடர்பாக செய்தி சேகரிப்பதற்காக தூர்தர்ஷன் குழுவினர் தண்தேவாடா மாவட்டத்தில் உள்ள ஆரன்பூருக்கு காட்டுப்பகுதி வழியாக சென்றபோது அவர்கள் மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்டனர்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாதுகாப்பு படையினர் மாவோயிஸ்டுகளை தீவிரமாக வேட்டையாடி வருகின்றனர்.

இந்த நிலையில், சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ளது சக்லார் கிராமம். இந்த கிராமத்தில் டி.ஆர்.ஜி மற்றும் எஸ்.டி.எப் படையினர் இணைந்து மவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக சிறப்பு தாக்குதல் ஒன்றை நடத்தினர்.

இந்த தாக்குதலில் 8 மாவோயிஸ்டுகளும், துகாப்பு படையை சேர்ந்த 2 வீரர்களும் சேர்த்து மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர். மாவோயிஸ்டுகள்  பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக சுக்மா மாவட்ட எஸ்.பி. அபிஷேக் மீனா  கூறி உள்ளார்.

90 சட்டமன்ற தொகுதிகளை சத்திஸ்கர் மாநிலத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. முதல் கட்ட தேர்தல்  12ம் தேதியும், 2வது கட்ட தேர்தல் வரும் 20ந்தேதியும் பலத்த பாதுகாப்புக்கிடையில் நடைபெற்று முடிந்தது குறிப்பிடத்தக்கது.