பெஙகளூரு,

சிகலா விஷயத்தில் என்ன நடைபெற்று வருகிறது என்பது குறித்த்  அறிக்கையில் சுட்டிக்காட்டி யுள்ளேன். வெளிப்படையான விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளிவரும்- டி.ஐ.ஜி ரூபா.

சிறையில் வசதிகள்  செய்து தர ரூ.2கோடி ரூபாய் லஞ்சமாக சசிகலா சிறைத்துறை டிஜிபிக்கு வழங்கி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறைத்துறை பல்வேறு வசதிகளை வழங்கி வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், பரப்பன அக்ரஹார சிறைச்சாலையை ஆய்வு செய்த சிறைத்துரை டி.ஐ.ஜி ரூபா,  சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது என்றும், இதற்காக, டி.ஜி.பி.சத்ய நாராயணாவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அதிரடி குற்றச்சாட்டுக்கள் கூறி கடிதம் எழுதியிருந்தார்.

இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், டிஜிபி சத்யநாராயணா அப்படி ஏதும் இல்லை என்றும் மறுப்பு தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த டிஐஜி ரூபா,

சிறையில் ஆய்வு செய்து நான் கண்டறிந்ததை டிஜிபிக்கு புகாராக அனுப்பியுள்ளேன். சிறைத் துறை இயக்குநர் சத்தியநாராயண ராவுக்கும் எனக்கும் தனிப்பட்ட பிரச்சினைகள் ஏதும் இல்லை.

உரிய விசாரணைக்கு பிறகே சசிகலா விவகாரம் குறித்து டிஜிபி தத்தாவுக்கு புகார் அனுப்பினேன்.

தான் ஆதாரம் இல்லாமல் புகார் கூறவில்லை, தான் எந்த விதிகளையும் மீறவில்லை என்றும், சிறையில் விவிஐபி சலுகை பெற சசிகலா சார்பில் ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும், சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன என்றார் ரூபா.

சிறையில் நடப்பது குறித்து வெளிப்படையான விசாரணை தேவை என்றும்,  தனது கடிதத்தில் உள்ள உண்மைகளை கண்டறிய அரசு விசாரணை நடத்தலாம்.

வெளிப்படையான விசாரணை நடத்தினால் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகும் என்றும் அதிரடியாக கூறி உள்ளார்.

இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.