சென்னை: 

மிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது 5 சதவிகிதம் அகவிலைப்படி உள்ள நிலையில் மேலும் 2 சதவிகிதம் உயர்த்தி 7 சதவிகிதமாக மாற்றியமைப்பட்டு உள்ளது.

இதற்கான உத்தரவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறப்பித்து உள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக அரசு ஊழியர்கள் வேண்டுகோளை ஏற்று,  தற்போது நடைமுறையில் உள்ள 5%இல் இருந்து 7% ஆக அகவிலைப்படி மாற்றியமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை சம்பளத்தில் இருந்து 7% ஆக அகவிலைப்படி வழங்கப்படும் என்றும், ஜனவரி 1ம் தேதியில் இருந்து முன்தேதியிட்டு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியும் 5%இல் இருந்து 7% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு உள்ளது.