Random image

தமிழக அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப் படி உயர்வு

சென்னை:

தமிழக அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படியை உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 7 முதல் 9 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் 18 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.1,157 கோடி செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வால் அரசு ஊழியர்களுக்கு ரூ.314 முதல் ரூ.4,500 வரை ஊதிய உயர்வு கிடைக்கும். ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.157 முதல் ரூ. 2,500 வரை கூடுதலாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.