மதுரையில் மீன், இறைச்சி விற்பனை கடைகளுக்கு 2 நாள் தடை…

--

மதுரை:

 கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கிலும், மக்கள் கூடுவதை தடை செய்யும் வகையிலும், மதுரையில் 16, 17ந்தேதி (சனி, ஞாயிறு), மாமிசங்கள் விற்பனை செய்யும் கடைகள் திறக்க தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,  மதுரை நெல்பேட்டை, மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் செயல்படும் மீன் கடைகள் நாளையும் (சனிக்கிழமை), மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளில் செயல்படும் இறைச்சி, மீன் கடைகள் நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) திறக்கத் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் மீன், இறைச்சி கடைகளில் பொதுமக்கள் கூடுவதைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.