ஜெ. மரணம்: ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு 2 நாள் ‘விடுமுறை’

சென்னை:

றைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு 2 நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்றும் நாளையும் விசாரணை கிடையாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. விசாரணை ஆணைய நீதிபதி ஆறுமுகசாமி அவசர வேலையாக திருநெல்வேலி சென்று விட்ட காரணத்தால் 2 நாட்கள் விசாரணை கிடையாது என்று  அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரித்து வரும் விசாரணை ஆணையம், ஏற்கனவே முன்னாள் தலைமை செயலாளர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்பட அவருக்கு பிரத்யேகமாக சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் சிவகுமார் உள்பட பலரிடும் விசாரணை நடத்தியது. மேலும்,  தமிழக அரசின் முன்னாள் சிறப்புச் செயலாளர் சாந்தா ஷீலா நாயர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி கிளை மேலாளர் லீலா செல்வக்குமாரி, சசிகலா வின் உதவியாளர் கார்த்திகேயன் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவரது உதவியாளர்கள், வீட்டு வேலைக்காரர்கள் உள்பட, ஜெ.யின் உறவினர்கள், சசிகலாவின் உறவினர்கள் உள்பட  பலரிடம் விசாரணை நடத்தி உள்ளது. மேலும் பலரிடம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், இன்று விசாரணைக்கு ஆஜராக மருத்துவர் சிவக்குமாருக்கும், நாளைய விசாரணைக்கு ஆஜராக ,மருத்துவர் நளினி, செவிலியர் பிரேமா ஆன்டனி ஆகியோருக்கு சம்மன் அனுப்பிய நிலையில், நீதிபதி அவசர வேலையாக வெளியூர் சென்றுவிட்டதால் இன்றும், நாளையும் விடுமுறை விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வரும் 28-ம் தேதி நேரில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு  ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.