தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் 2 நாட்கள் மழை: இந்திய வானிலை மையம்

டில்லி:

மிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் 2 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக  இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதுபோல  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையமும்  தெரிவித்துள்ளது.

வெப்பச் சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  தமிழகத்தில் அவ்வப்போது மிதமானது முதல் கனமழை வரை  மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கம் மற்றும் வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் 7 செமீ மழை பெய்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் 6 செமீ, ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் 5 செமீ மழை பெய்துள்ளது. ஆம்பூர், வேலூர், பெரியகுளம் பகுதியில் தலா 4 செமீ மழை பதிவாகி உள்ளது.

இந்த நிலையில் இன்றுடன்  தெற்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்து  வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை உள்ளது.

மேலும் தற்போது, தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும், கேரளா மற்றும் அதனை ஒட்டிய கர்நாடக கடற்கரை பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறதுரு.  இதன் காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகம், கேரளா  மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும். சில இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட 12 சதவீதம் அதிகமாக பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.