சென்னை,

மிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ்2 பொதுத்தேர்வு தொடங்குகிறது. இன்று நடைபெறும் தேர்வில்  8.98 லட்சம் பேர் பிளஸ் 2 தேர்வு எழுத இருக்கிறார்கள். இதற்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  2,427 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்வை சிறை கைதிகள்  98 பேர் எழுதுகிறார்கள். இதற்காக தமிழகம் முழுவதும் பிளஸ்2 தேர்வை எழுத விரும்பிய சிறை கைதிகள் அனைவரும் சென்னை வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

இதற்காக சென்னை புழல் சிறைச்சாலையில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 98 கைதிகள் இன்று தேர்வு எழுது கிறார்கள்.

சென்னை, புழல் சிறையில் தண்டனையை கைதிகள் 20 பேரும், விசாரணை கைதிகள் 4 பேரும், திருச்சியில் இருந்து 15 பேரும், கோவையில் இருந்து 13 பேரும், மதுரையில் இருந்து 11 பேரும், வேலூரில் இருந்து 8 பேரும், சேலத்தில் இருந்து 9 பேரும், பாளையங்கோட்டையில் இருந்து 10 பேரும், கடலூரில் இருந்து 3 பேரும், புதுக்கோட்டையில் இருந்து 5 பேரும் என மொத்தம் 98 சிறை கைதிகள் இன்று தொடங்கும் பிள12 தேர்வு எழுதுகின்றனர்.

இதற்கான  ஏற்பாடுகளை புழல் சிறை துறை அதிகாரிகள் செய்து உள்ளனர்

 

இன்று நடைபெறும் தேர்வில் 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தேர்வு எழுதுகின்றனர்.  அவர்களில் 4 லட்சத்து 17 ஆயிரத்து 952 பேர் மாணவர்கள், 4 லட்சத்து 80 ஆயிரத்து 810 பேர் மாணவிகள்.  2,427 தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. தனித்தேர்வர்களாக 20 ஆயிரத்து 448 மாணவர்களும், 11,392 மாணவிகளும், பிற பாலினத்தவர் 3 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.