Random image

ப.சிதம்பரம் வீட்டில் திருடிய 2 பணிப் பெண்கள் கைது

சென்னை:

சென்னை நுங்கம்பாக்கம் பைகிராப்ட்ஸ் கார்டன் சாலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டில் தங்க நகைகள், ஒரு தங்கக்காசு, 6 பட்டு புடவைகள், ரூ.1.5 லட்சம் ரொக்கம் ஆகியவை திருட்டு போனது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

கடந்த 10 ஆண்டுகளாக சிதம்பரம் வீட்டிலேயே தங்கி வேலை செய்து வரும் வெண்ணிலா, விஜி ஆகியோருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து திருடப்பட்ட பொருட்களை மீட்கும் பணியில் போலீசார் மீட்டனர். இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் வெண்ணிலா, விஜி ஆகியோரை கைது செய்தனர்.