இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியினர் இருவருக்கு அமைச்சர் பதவி

 

லண்டன்:

ங்கிலாந்தில் இந்திய வம்சாவளியினர் இருவருக்கு துணை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தனது மந்திரிசபையை மாற்றி அமைத்து உள்ளார். இதில் , ரிஷி சுனக்.  சுயல்லா பெர்னாண்டஸ் ஆகிய இந்திய வம்சாவளியினருக்கு அமைச்சர் பதவி அளித்துள்ளார்.

37 வயதான ரிஷி சுனக் இங்கிலாந்தில் பிறந்தவர். ‘இன்போசிஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகன் ஆவார். நாராயண மூர்த்தியின் மகள் அக்‌ஷதாவை திருமணம் செய்துள்ளார்.

இவர் ரிச்மாண்ட் தொகுதி எம்.பி. ஆவார். இவருக்கு வீட்டு வசதித்துறை, உள்ளாட்சித்துறை அளிக்கப்பட்டுள்ளது.

37 வயதான சுயல்லா பெர்னாண்டசும் இங்கிலாந்தில் பிறந்தவர்தான். கோவாவை பூர்வீகமாக கொண்ட  வர் பார்ஹாம் தொகுதி எம்.பி. ஆவார். இவருக்கு ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது தொடர்பான துறை அளிக்கப்பட்டு உள்ளது.

இவர்கள் இருவரும் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பாக நடந்த பொதுவாக்கெடுப்பின்போது, அதற்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்தவர்கள்  என்பது குறிப்பிடத்தக்கது.