காஷ்மீர் : பாகிஸ்தான் ராணுவம் தாக்கியதில் இரு இந்திய வீரர்கள் பலி

ஸ்ரீநகர்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர்கள் இருவர் மரணம் அடைந்தனர்.

காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

நேற்று இரவு சுந்தர்பணி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவத்தின் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

இதற்கு இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது.

தாக்குதலில் இரு இந்திய வீரர்கள் மரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.